உடல் தானம் தந்த வள்ளல் பட திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு பகுதியில் உடல் தானம் செய்தவரின் படத்திறப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-01-29 06:40 GMT
படத்திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சன்னதி தெருவை சார்ந்தவர் விஸ்வநாதன் ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர் இவர் உடல் நல குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி காலமானார். இவரது கண் மற்றும் உடல் தானம் இறந்தவர் விருப்பப்படி அவரது மகன் கோபு தலைமையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஓப்படைத்தனர். அவரது திருவருப்படம் திறப்பு விழா திருவோத்தூர் பகுதியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் புதுவை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி, நகரமன்ற தலைவர் மோகனவேல்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், திமுக ஓன்றிய செயலாளர்கள் தினகரன், ஞானவேல், விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.