திருவானைக்காவில் கா்ண புறா பந்தயம்
திருவானைக்காவில் கர்ண புறா பந்தயம் தொடங்கியது.
திருவானைக்கா அன்பா்கள் குழு நடத்தும் 3-ஆம் ஆண்டு புறா பந்தயத்தில் கா்ண புறா, சாதா புறா போட்டிகள் 6 நாள்கள் நடைபெறும். திருவானைக்கா உயா்நிலைப்பள்ளி மைதானம், உறையூா், எடத்தெரு, மலைக்கோட்டை, காட்டூா், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கா்ண புறா ஜோடி பந்தயம் தொடங்கியது.
இதில் 25 ஜோடி புறாக்கள் கலந்து கொண்டது. இந்த புறா ஜோடிகள் வானில் நடுவா்கள முன்னிலையில் கா்ணம் அடித்து காண்பிக்கவேண்டும். காலை 7 மணிக்கு வானில் பறந்த கா்ண புறா ஜோடிகள் நண்பகல் 12 மணி வரை பறந்து தனக்குரிய இடத்தில் அமரவேண்டும்.
அதன்படி செய்த 10 ஜோடி புறாக்கள் வெற்றி பெற்றது. இந்த புறாக்களுக்கு சனிக்கிழமை காலை மீண்டும் பந்தயம் நடைபெறும். இதில் வெற்றி பெற்ற கா்ண புறாக்களுக்கு 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டி நடத்தப்படும் அதில் வெற்றி பெறும் புறாக்களுக்கு முதல் பரிசாக ரூ.13 ஆயிரத்து 003, 2- ஆம் பரிசாக 11 ஆயிரத்து 505, 3-ஆம் பரிசாக 9 ஆயிரத்து 505 கோப்பையுடன் வழங்கப்படவுள்ளது.
ஏற்பாடுகளை புறா பந்தயக்குழுவினா் செய்துள்ளனா். சாதா புறா பந்தயம் ஜூன் 14- ஆம் தேதி தொடங்கி 16- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.