மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் குடும்பத்திடம் ஒப்படைப்பு

மன நலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தை பிரிந்து சுற்றித்திரிந்த ஆந்திராவை சேர்ந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த தனியார் அறக்கட்டளை அவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து வைத்தனர்.

Update: 2024-07-01 07:00 GMT

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் குடும்பத்துடன் ஒப்படைப்பு 

ஆந்திரா மாநிலம் க்ரீம் மாவட்டத்தில் சையது மொய்ன்-பர்வீன் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களின் மகன் 34 வயதான சையத் மொய்ஃப் என்பவர் பைப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு பண கஷ்டம் ஏற்பட்டதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி கோயமுத்தூர் வந்துள்ளார்.தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த சையத் மொய்ஃப் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சையத் மொய்ஃப் என்பவரை அட்சயம் அறக்கட்டளை ஊழியர்கள் மீட்டு பெருந்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து நான்கு மாத சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்த சையத் மொய்ஃப்-யை ஆந்திராவில் உள்ள பெற்றோரை ஈரோடு வரவழைத்தனர்.

தனது பெற்றோரை சந்தித்த சையத் மொய்ஃப் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவர்களை கட்டி தழுவினார்.இதுகுறித்து சையத் மொய்ஃப் பெற்றோர்கள் கூறும்போது,தனது மகன் உயிரிழந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும் தற்போது அவரை மீட்டு நலமுடன் ஒப்படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து மகனை மீட்டு சிகிச்சை அளித்த அட்சயம் அறக்கட்டளையினரை ஆனந்த கண்ணீருடன் கட்டி நன்றி தெரிவித்த காட்சி காண்போரை சிலிர்க்க வைத்தது.

Tags:    

Similar News