இடங்கணசாலை நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடுதல்
சங்ககிரி அருகே இடங்கணசாலை நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடுதல்.;
Update: 2024-03-10 15:24 GMT
மரக்கன்றுகள் நடுதல்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நெய்க்காரப்பட்டி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் திட்ட முகாம் துவங்கி ஏழு நாட்கள் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுப்புறம், சாலையோரம், பள்ளி, கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதன் நிறைவு விழா இடங்கணசாலை பகுதியில் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர திமுக செயலாளர் செல்வம், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரூபிகா உத்தரகுமார், விஜயலட்சுமி குமார் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் உடனிந்தனர்.