ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-21 05:55 GMT
இளைஞர் கைது
உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது உளுந்துார்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வாலிபர் ஒருவர் பொது இடத்தில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ரகளையில் ஈடுபட்ட உளுந்தண்டார்கோயிலைச் சேர்ந்த சுதாகர், 28; என்பவரை கைது செய்தனர்.