பொன்னமராவதி : வீட்டு வசதி குடியிருப்பு அருகே தீ விபத்து

Update: 2023-12-15 06:01 GMT

தீ விபத்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொன்னமராவதி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே உள்ள கண்மாயில் மண்டிக் கிடந்த கோரைப்புற்கள் மற்றும் குப்பையில் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினர் நீண்டநேரம் போராடி அணைத்தனர்.

பொன்னமராவதி-கொப்பனாபட்டி சாலையில் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு அருகே உள்ள அச்சுக்காட்டு கண்மாயில் உள்ள கோரைப்புற்கள் குப்பையில் அணைக்கப்படாதநெருப்பால் தீப்பற்றியது மற்றும் தகவலின்பேரில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொன்னமராவதி தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். போதிய பராமரிப்பின்றி இருந்த கண்மாய் ஓரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து கோரைப் புற்களில் தீ பரவியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட கண்மாயை சுற்றி மின்மாற்றிகள் இருந்ததால், பாதுகாப்பு கருதி சுமார் 1 மணிநேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.

Tags:    

Similar News