கர்ப்பிணி தாய் தனது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
தென்காசி மாவட்டம், தேவிபட்டணம் பகுதியில் குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் பகுதியில் மாரியப்பன் மினி லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரின் மனைவி காளீஸ்வரி(24) க்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தனது 2வயது குழந்தையுடன் கோபித்து கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சுகுமார் என்பவரின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த சிவகிரி போலீசார் விரைந்து சென்று நீரில் மூழ்கிய கர்ப்பிணி தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கணவன் மற்றும் உறவினர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக பச்சிளம் குழந்தையோடு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.