விருதுநகர் சந்தையில் அத்யாவசிய பொருட்களின் விலை நிலவரம்
விருதுநகர் சந்தையில் அதிகரித்த பாமாயில், முண்டு வத்தல், தொலி உளுந்தம் பருப்பு விலை : உருட்டு உளுந்து, பாசிப் பயறு,மல்லி விலைகுறைந்துள்ளது.
விருதுநகர் சந்தையில் திடீரென பாமாயில் விலை அதிக அளவை எட்டியுள்ளது. முண்டு வத்தல், தொலி உளுந்து ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.உருட்டு உளுந்து, பாசிப் பயறு, மல்லி ஆகியவற்றின் விலை சற்று குறைந்தள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன் விபரம் வருமாறு : பாமாயில் விலையானது கடந்த வாரம் 15 கிலோ ரூ.1425 என இருந்தது. இந்த வாரம் திடீரென டின் ஒன்றுக்கு ரூ.125வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.1550க்கு விற்பனையாகிறது. முண்டு வத்தல் புதுசு வகை 100 கிலோ ஆரம்ப கட்ட விலை ரூ.18ஆயிரமாகவும் உச்சபட்ச விலை ரூ.20 ஆயிரம் என இருந்தது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, ஆரம்ப கட்ட விலை ரூ.19ஆயிரமாகவும் அதிகபட்ச விலை ரூ.21 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. மல்லி புதுசு வகை 40 கிலோ ரூ.4ஆயிரம் முதல் ரூ.4200 வரை கடந்த வாரம் விற்பனையானது. இந்த ரூ.400 வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.3600 முதல் 3900 வரை விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.12,200 என விற்கப்பட்டத. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்தள்ளது. எனவே, ரூ.12100 என விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200 என விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.10,700 என விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.205 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ரூ.10,205 என்ற விலைக்கு விற்பனையாகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5400 என விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.150 குறைந்துள்ளது. எனவே, ரூ.5250 என விற்கப்படுகிறது. பாசிப்பயறு இந்தியா வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.9200 என விற்ற நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.400 வரை குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, ரூ.8,800 என விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமம் ஏற்படவில்லை. கடந்த வாரம் நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலையே தொடர்கிறது.