பூக்களின் வரத்து குறைந்ததால் விலை உயர்வு
கோடை வெயில் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
Update: 2024-04-10 04:16 GMT
கோடை வெயில் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைந்ததாலும் பண்டிகைக் காலம் என்பதாலும் பூக்களின் தேவை அதிகளவில் இருந்ததால் பூக்கள் விலை 2 மடங்கு உயர்ந்து விற்பனையானது. 1 கிலோ ரோஸ் ரூ.140, சம்பங்கி ரூ.150, செண்டுமல்லி ரூ.80, கோழி கொண்டை ரூ.70, வாடாமல்லி ரூ.50, மல்லிகை ரூ.600, கனகாம்பரம் ரூ.600, முல்லை ரூ.600, ஜாதி பூ ரூ.500க்கு விற்பனையானது.