பிரதமர் மோடி பதவியேற்பு: பாஜக வினர் கொண்டாட்டம்!

அவினாசியில் பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பதை முன்னிட்டு பாஜக கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-06-10 12:59 GMT
  • whatsapp icon
பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக வரலாற்றுச் சாதனை வெற்றி பெற்று நரேந்திர மோடி  அவர்கள்  பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி, அவிநாசி நகரில் நகரத் தலைவர் தினேஷ்குமார் தலைமையில், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் சூலை மோகன் குமார்,சிந்தாமணி பாலகிருஷ்ணன்,தாலுகா ஆபிஸ் ரமேஷ்,பழைய பேருந்து நிலையம் நந்தகுமார்,புதிய பேருந்து நிலையம் விஜயகுமார், ஆகியோர்   ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட துணை தலைவர் சண்முகம், பாராளுமன்ற இணை பொறுப்பாளர் கதிர்வேல், மூத்த நிர்வாகிகள் ஜெயகோபால், செல்வராஜ், சீனிவாசன், சந்துரு,  பொதுச் செயலாளர் பிரபு வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் வீரக்குமார், பாலகிருஷ்ணன், சித்ரா நகர செயலாளர் தனசேகர், புகழ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News