கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-12-11 09:05 GMT

திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு ஏ ஐ டி யு சி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஏ ஐ டி யூ சி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமானது இன்று நடக்கிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட ஏ ஐ டி யூ சி சங்கங்கள் சார்பில் நலவாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு உதவித்தொகை 50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விபத்து மரண உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தினக்கூழி தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் பண பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News