கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பூதப்பாண்டியில் வீடுகளை இழந்தோர் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்தனர்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள அருமநல்லூர் செக்கடி பகுதியில் குண்டு குளம் அருகே சாலையோரமாக ஆறு வீடுகள் இருந்து வந்தது. இவற்றை அகற்ற தனி நபர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சம்மந்தபட்ட வீடுகளையும் அப்புறபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதின் அடிப்படையில் வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.
ஆனால் வீடுகள் இழந்த ஆறு குடும்பத்தினர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே தங்கி இருந்து ஒரு வாரமாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்கள். பூதப்பாண்டி போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந் நிலையில் இன்று மாலையில் மீண்டும் செக்கடி மக்கள் இடிபாடுகளுக்கு இடையே கண்களில் கருப்பு துணி கட்டி அந்த இடத்தில் திடீர் என போராட்டம் நடத்தினர்கள்.