தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-21 14:00 GMT
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு இரத்துசெய்யவேண்டும், மேலும்ஒருங்கிணைப்பாளர் அருள் மீது விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்,

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் ஏ. வ , வேலு அவர்களையும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமரேசன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக தன்னுடைய கோஷங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News