மயிலாடுதுறை சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரைக்கண்டித்து போராட்டம்

மயிலாடுதுறையில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரைக்கண்டித்து 2வது நாள்போராட்டம்;

Update: 2023-12-01 06:40 GMT

கண்ணன் ஆர்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு, சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரின், ஊழியர்கள் விரோத போக்கினை கண்டித்தும், 2வது நாளாக சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர், துரைகார்த்தி தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , மாநில அமைப்பு செயலர் ராஜ்குமார், தணிக்கை செயலர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து சுகாதார ஆய்வாளர்கள் இந்த போராட்டத்தல் கலந்து கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், மாதாந்திர கூட்டத்தை மாவட்ட தலைநகரான மயிலாடுதுறையில் நடத்த வேண்டும், முறையான அறிவிப்பு இன்றி, காலிபணியிடங்கள் பூர்ததி செய்யப்பட்டதறகான, காரணங்களை வெளியிட வேண்டும், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News