மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கல்

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-30 11:58 GMT

மாவட்ட ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் (MR), 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மிகக் கடுமையாக பாதிக்கபட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் (SD), தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் (MD),

பார்கின்சன் நோய் மற்றும் நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் (PD) மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் (LC) ஆகியோர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேற்காணும், இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர உதவித்தொகை ரூ.2,000/- பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும், 1. கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்ற வாழ்நாள் சான்று 2.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் 3. மாற்றுத்திறனாளியின் ஆதார் அட்டை நகல் 4. தனித்துவமான அடையாள அட்டை நகல் (UDID Card) 5. ரூ.2,000/- மாதாந்திர உதவித்தொகை பெறும் வங்கி கணக்கு புத்தக நகல் 6. வங்கி கணக்கில் பாதுகாவலராக உள்ள நபரின் ஆதார் அட்டை நகல் 7. பாஸ்போர்ட் அளவு

புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியின் பெற்றோர் / பாதுகாவலர் (மாற்றுத்திறனாளி வர வேண்டாம்) நேரில் வந்து 15.06.2024-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 0452-2529695-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News