மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுழற்சி முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-28 06:47 GMT

மோட்டருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கல் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுழற்சி முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட 25 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொளி கருவிகள் வழங்கப்பட்டது. இதே போல் மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் செய்து முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News