பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுவிநியோக குறைத்தீர் கூட்டம் இன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-02-10 01:59 GMT
பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்
நெல்லையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் இன்று (பிப்.10) நடைபெறுகிறது.இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு செய்தல், மாற்றம் செய்தல் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.