தர்மபுரி மாவட்டத்தில் நாளை முதல் பொதுத் தேர்வுகள் மாவட்ட ஆட்சியர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 01.03.2024 முதல் தொடங்கி 08.04.2024 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-29 15:27 GMT

மாவட்ட ஆட்சியர்

இது குறித்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 01.03.2024 முதல் தொடங்கி 08.04.2024 வரையும், மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 83 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. மாணவர்கள் 9.282 பேரும் மாணவிகள் 9867 பேரும் ஆக மொத்தம் 19,149 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு 83 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. மாணவர்கள் 9,380 பேரும் மாணவிகள் 9953 பேரும் ஆக மொத்தம் 19.993 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 94 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் 11,213 பேரும், மாணவிகள் 10,486 ஆக மொத்தம் 21,699 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலைப் பொதுத்தேர்விற்கான 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் (தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் அரூர்) ஆயுதம் ஏந்திய காவலர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 5 மையங்கள் (தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர்) வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக செயல்பட உள்ளன.

இத்தேர்வு பணியில் முதன்மை வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள். வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 3,500 பேர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு பொதுத் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும், முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்களும் இத்தேர்வினை உண்மையாகவும். நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோஇல்லாமல் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும்.

இத்தேர்வு பணிகளில் ஈடுபடுபவர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் அந்தந்த அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இஆப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News