பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் நிகழ்ச்சியில் 410 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2024-02-28 01:38 GMT

குறைத்தீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி என பல்வேறு துறை தொடர்பாக 410 புகார் மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News