பொதுமக்கள் குறைதீர் கூட்டம் - ஒரே நாளில் 582 மனுக்கள்
Update: 2023-11-07 08:12 GMT
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் நேற்று ஒரே நாளில் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 582 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் அளித்தனர். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.