காவிரி கூட்டுக்குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
கே வி குப்பம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Update: 2024-05-18 10:53 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பசுமாத்தூரில் பாலாற்றங்கரை ஓரங்களில் குடிநீர் சேகரிப்பதற்கான கிணறுகள் அமைக்கப்பட்டு, அவை சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் அதில் உப்புத் தன்மை அதிகம் உள்ளது, உடல் நலத்திற்குக் கேடானது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகொண்டா அருகே பாலாற்றங்கரையோரம் ஐதர்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் தங்களுக்கு, தரமான குடிநீரை வழங்க வேண்டும். பாலாற்றங்கரை ஓரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீரை உடனடியாக வழங்கவேண்டும் என்று கோஷமிட்டனர்.பின்னர் போலீசாரின் பேச்சு வார்தையைத் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.