பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்.. பொள்ளாச்சி..மார்ச்..04 பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலக்குறிச்சி புது காலனி பகுதியில் சுமார் 250.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே குடிநீர் விநியோகப்படவில்லை என கூறப்படுகிறது.. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அங்குல குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது குடிக்க கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் உள்ள கைகாட்டி என்னும் இடத்தில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியார் காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் மறியல் போராட்டத்தை கைவிடவில்லை.. பின்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இன்று மாலை முதல் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர்.
பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனைக்காக காலி குடங்களுடன் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..