குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதி

பொன்னமராவதியில் மந்தகதியில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-28 02:54 GMT

காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் அமைக்கும் பணி

பொன்னமராவதியின் முக்கிய சாலையான அண்ணாசாலை நகரின் முக்கிய வணிக நிறுவனங்கள் மிகுந்த,போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்தச் சாலை வழியாகத்தான் வாரச்சந்தை, பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கும் செல்ல வேண்டும். இந்தச் சாலைப் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 10 நாள்களுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வரும் இந்தப் பணியால் போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், தூசி பறப்பதால் வாக ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்மிகவும் அவதிக்குள்ளாக வருகின்றனர். வாகனப் போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையில் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரையில் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News