வரைவு வாக்காளர் பட்டியல் ஆட்சியர் வெளியிடு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி வெளியிட்டார்

Update: 2023-10-27 09:17 GMT

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி வெளியிட்டார் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் எண்ணிக்கையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 748 பேர் வாக்காளர்களாக உள்ளனர் தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதி கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வறைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி வெளியிட்டார் இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி விளாத்திகுளம் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 748 பேர் வாக்காளர்களாக உள்ளனர் அதிகபட்சமாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 931 பேர் வாக்காளர்களாக உள்ளனர் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல் சேர்த்தல் திருத்தம் உள்ளிட்டவை வருகிற 9 /12 /2023 வரை நடைபெற உள்ளது இதற்காக வருகிற 4/ 11/ 2023, 5/ 11/ 2023 18/ 11 /2023 மற்றும் 19/ 11/ 2023 ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
Tags:    

Similar News