கொன்னைப்பட்டியில் மீன் பிடி திருவிழா!
பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்தனர்.
Update: 2024-03-22 04:45 GMT
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் கோடை காலத்தை முன்னிட்டும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,ஊர் ஒற்றுமைக்காகவும் மீன்பிடி திருவிழா நடந்தது. கொன்னைப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் களமிறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணங்களான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு போட்டிப்போட்டு மீன்பிடித்தனர். வலையில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் உள்ளிட்டவை சிக் கின. அவற்றை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.