புதுக்கோட்டை : வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்ட ஆட்சியர்!
புதுக்கோட்டையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 15:50 GMT
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவுபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியிலும் காண வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் வெளியிடப்பட்டது இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி விட பட்டு அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதிமுக காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகள் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் ஆனால் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியாக உள்ள திமுக பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவில்லை இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது வரைவு வாக்காளர் வெளியிட்டின்படி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வகோட்டை விராலிமலை திருமயம் ஆலங்குடி அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் ஆறு லட்சத்து 51 ஆயிரத்து 559 ஆம் வாக்காளர்களும் 6 லட்சத்து 64 175 பெண் வாக்காளர்களும் 64 மூன்றாம் பாலினத்தவர்கள் என 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர் 21 ஆயிரத்து 762 புதிய முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் இவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 1559 வாக்குச்சாவடி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன