புதுக்கோட்டை: பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

Update: 2023-11-29 07:45 GMT

நிலவேம்பு குடிநீர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு  நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை நடைபெற்ற நிகழ்வுக்கு, மற்றும் சார்பில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எம். வனஜா, உதவி சித்த மருத்துவ அலுவலர் சரவணன், டீம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கே.எச். சலீம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினர்.இந்த நிலவேம்புக் குடிநீரில் நிலவேம்பு மட்டுமின்றி மொத்தம் 9 சித்த மருந்துகள் கலக்கப்பட்டுள்ளது குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். தொடர்ந்து, தற்போதைய மழைக்காலச் சூழலில் பரவிவரும் காய்ச்சல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும்  விளக்கிப் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் குமரவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News