நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ராகா தமிழ்மணி!
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக பரமத்தி வேலூர் ராகா ஆயில் மில் நிறுவனர் தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.;
By : King News 24x7
Update: 2024-03-20 06:23 GMT
அதிமுக வேட்பாளர்
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி- வேலூரை சேர்ந்த ராகா சு. தமிழ்மணி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அக்கட்சியின் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளராக உள்ளார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு விளம்பர யுக்தியை கையாண்டு மக்கள் மத்தியில் தனது பிம்பத்தை பதிய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.