சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் - வாகன ஓட்டிகள் அவதி
Update: 2023-11-29 07:53 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மாமல்லன் நகர் - அசோக் நகர் இடையே ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. காஞ்சிபுரம் மாமல்லன் நகர், மின் நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதி மக்கள், இந்த சுரங்கப்பாதை வழியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஒட்டியுள்ள சுரங்கப்பாதையில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களின், சைலன்சரில் மழைநீர் புகுந்து வாகனம் பழுதடைகிறது. எனவே, சுரங்கப்பாதையில், மழைநீர் தேங்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.