ராமநாதபுரம்: ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-12-15 11:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் அருகே கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் பெருங்குளம் சேகர், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அஞ்சல் துறையில் எட்டு மணி நேரம் வேலை ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை உடனே வழங்க வேண்டும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வாரிசு வேலையில் பணி அமர்த்த வேண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்

அதன் பின்பு பேரணியாக சென்று ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கோவிந்தராஜன் முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் அஞ்சல் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷத்தில் வலியுறுத்தப்பட்டது

Tags:    

Similar News