ராமநாதபுரம் முனீஸ்வரர் கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் மாவட்டம், வழுதூரில் அமைந்துள்ள கோயிலில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் பேருந்து நிலையம் அருகே வழுதூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் மங்களம் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், பாட்டையா என்ற தவசி ஐயா ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 20 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சர்வ சாதகம் ஸ்ரீ மனோகர குருக்கள் தலைமையில் வேத விற்பனர்கள் அனுக் நை , விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியா வாசனம், வாஸ் சாந்தி, ஆகிய பூஜைகளும் இரவு 8.30 மணியிலிருந்து மகாபூர்ணாகதி தீபாரனை பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
9.30 மணிக்கு எந்திர ஸ்தானம் அஷ்டபனந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பரிசா குதி, நாடி சந்தானம் மகாபூரணாகுதி தீபாதாரணை யாத்திரா தானம் நடைபெற்றது காலை 9 மணியிலிருந்து 10.30 மணி அளவில் மீன இலக்கணத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் கடம் புறப்பாடு நடைபெற்றது. வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வந்து கும்பத்தில் தண்ணீர் ஊற்றும் போது வருண பகவான் மழை பொழிந்தது.
அதன் பின்பு வானத்தில் கருட பகவான் வட்டமிட்டது ஆன்மீக பக்தர்கள் அருள் பாவித்தனர். அருள்மிகு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் பாட்டியா என்ற தவசி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர், தெற்கு காட்டூர், வாலாந்தரவை , அண்ணாநகர், உடைச்சியார் வலசை மற்றும் ரெகுநாதபுரம், காரான், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான ஆன்மீகப் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை நிர்வாகிகள் பஞ்சு பூமி உள்ளிட்ட பலர் செய்தனர் விழாவின் நிறைவில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.