ராசிபுரம் நகர பேருந்து நிலைய இடமாற்ற ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் நகர பேருந்து நிலைய இடமாற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வியாபாரிகள் பொதுநல அமைப்புகள் வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-07-05 16:09 GMT

ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் பொது நல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 19 48ல் உருவாக்க பட்டது. சேலம் மாநகராட்சிக்கு அடுத்தபடியாக ராசிபுரம் நகராட்சி உருவானது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமையாமல் நான்கு கிலோமீட்டர் உள்ளே தள்ளி அமைந்ததனால் இதற்குப் பின்பு நகராட்சியாக உருவான நாமக்கல் திருச்செங்கோடு நகராட்சியில் வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனால் தொழில் வளர்ச்சியின் இண்மையாலும் தொழில் நிறுவனங்கள் அமையாத போனதினாலும் ராசிபுரம் நகராட்சி வளர்ச்சி காணவில்லை இருந்தாலும் ராசிபுரம் நகருக்கு மேலும் ஒரு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர் அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

அதனை ஒட்டி ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதற்கு பொதுமக்கள் வியாபாரிகள் வணிக நிறுவனத்தினர் பாதிக்கப்படாத வகையிலும் பொதுமக்கள் எளிதில் சென்று வரக்கூடிய அளவிற்கு பேருந்து நிலையம் அமைத்து தரவேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்தார்கள்.

இப்போதுள்ள ராசிபுரம் நகரில் பல்வேறு போக்குவரத்து நெரிசல்கள் இருப்பதாகவும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவைகளை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்கள். அதே போல தற்போது உள்ள ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகரப்புற பேருந்து நிலையமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

இறுதியாக திமுக மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ் குமார் பேசும்போது. திமுக அரசு அமைந்த முதல் பொதுமக்களின் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி தருவதுதான் தமிழக முதல்வரின் ஸ்டாலினின் தீவிர முயற்சியாக உள்ளது.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் நகருக்கு மீண்டும் ஒரு பஸ் நிலையம் அமைத்து விரைவில் திறப்பு விழா காண உள்ளது அதனை அடுத்து திருச்செங்கோடு பகுதியிலும் புதிதாக பஸ் நிலையம் அமைய உள்ளது . அந்த வகையில் ராசிபுரம் நகருக்கும் பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கான நல்வாய்ப்பாக தற்போது பஸ் நிலையம் இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். அதற்கான கருத்துக்கள் கூட்டத்தில் சுமூகமாக நடந்து வருவது வரவேற்கத்தக்கது.

ராசிபுரம் நகரம் மிகவும் பழமை வாய்ந்த நகரமாக உள்ளது கடந்த ஆட்சி காலத்தில் சாலை வசதி பிரச்சனை குடிநீர் பிரச்சனை போன்றவை மிகவும் பிரதானமாக இருந்து வந்தது . ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அதற்கு முக்கியத்துவம் தந்து அந்த பணிகள் தீர்த்து வருகிறோம் 40 ஆண்டு காலத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் பைப் லைன்கள் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் போதிய அளவிலான குடிநீர் கிடைக்காதது குறையாக இருந்தது அதனை மாற்றி அமைத்து தற்போது புதிய குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வசதி படைத்தவர்கள் போர்வெல் அமைத்து தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் கைத்தறி நெசவாளர்கள் ஏழை எளிய மக்கள் நகராட்சி குடிநீரை நம்பியே இருக்கின்றார்கள் அவர்கள் பயனடையும் வகையிலும் ஒன்றியங்கள் பேரூராட்சிகள் நகராட்சிகள் என பயனடையும் வகையில் புதிய குடிநீர் திட்ட பைப் லைன் 854 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி தற்போது நடந்து வருகிறது. அவைகள் முழுமையடையும்போது பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்ந்துவிடும் ஏன் 24 மணி நேரமும் கூட குடி தண்ணீர் கிடைக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராசிபுரம் நகராட்சியில் 57 கிலோ மீட்டர் சாலை 54 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ராசிபுரம் அருகே அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.‌

அந்த மருத்துவமனை அமைந்து முழுமை பெறும்போது அவசர விபத்து சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய மருத்துவமனை யாக அந்த மருத்துவமனை இருக்கும். அதேபோல ராசிபுரம் அருகே 5 ஏக்கரில் வேலாண்மை விற்பனை கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கூடு விற்பனை மையம் 2 ஏக்கரில் அமையப் பெற உள்ளது.

.. இந்த பட்டுக்கூடு அமையும் போது மற்ற மாவட்டங்களில் இருந்து இங்கு விற்பனைக்கு வருவது மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் இந்த பட்டுக்கூடு ஏல மையத்தை விவசாயிகளும் வியாபாரிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் . அதேபோல தீர்க்க முடியாத பிரச்சனையான போதமலைக்கு சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. வனப்பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை எடுக்கும் போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி பல்வேறு சட்ட திட்டங்கள் வரையறைகள் உள்ளது அவைகளுக்கு உட்பட்டு தான் பணிகளை செய்ய முடிகிறது. ஒரு மரத்தை வெட்டினால் கூட அந்த மரத்திற்கு பதிலாக பல மரங்களை நட்டு அவைகளை கணக்கு காண்பிக்கும் அளவிற்கான திட்டங்கள் சட்டங்கள் தற்போது உள்ளது.

எனவே ராசிபுரம் நகருக்கு புதிய பஸ் நிலையம் தேவை என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது அவைகளுக்கான இடம் தேர்வும் முக்கியம் அந்த இடத்திற்கு சுமார் ஏழு ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை இடம் தேவைப்படுகிறது. நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அந்த அளவிற்கு அரசு புறம்போக்கு நிலம் இல்லை எனவே முத்து காலிப்பட்டி. மசக்காளிப்பட்டி. கோனேரிப்பட்டி. அணைப்பாளையம்.

உள்ளிட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதா என வட்டாட்சியருக்கு நகராட்சி மூலம் கடிதம் வைக்கப்பட்டுள்ளது.‌ பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு நகராட்சி இடமும் பணம் இல்லை அரசு பஸ் நிலையம் அமைப்பதற்கும் அதில் கடை கட்டுவதற்கும் தான் நிதி ஒதுக்குவார்கள் அதில் கடை அமைத்து அதன் மூலம் வரும் வருமானத்தினை அதை திருப்பி செலுத்த வேண்டும். மேலும் சமூக ஆர்வலர்களும் பஸ் நிலையம் அமைப்பதற்கு இடங்களை கண்டறிந்து சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் பயன்படும் அளவிற்கு புறம்போக்கு நிலத்தினை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல மாவட்ட

மருத்துவமனை அமைப்பதற்கு மேலும் இடம் விஸ்வரனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பட்டா நிலம் யாரேனும் கொடுக்க முன் வந்தாலும் அதனை தானமாக கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் பஸ் நிலையம் அமைக்க முக்கியமாக சாலை வசதி என்பது முக்கியமான கருத்து கூறாக இருக்கிறது எளிதாக பொதுமக்கள் சென்று வரக்கூடிய அளவில் இருக்க வேண்டும் அரசின்

நெறிமுறைகள் பல உள்ளது பழைய பேருந்து நிலையம் அந்த இடத்திலேயே செயல்பட வேண்டும் என இங்கு பலரும் கூறியுள்ளார்கள். அது நகர பேருந்து நிலையமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் புதிதாக திட்டங்கள் அமையும் போது பல்வேறு எதிர்ப்புகள் வருவது வாடிக்கை தான் ஆனால் அந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதனை செயல்படுத்தும் போது தான் மக்களிடமும் வரவேற்பு கிடைக்க உள்ளது. நாமக்கல் பேருந்து நிலையம் ஏகிரேடு பேருந்து நிலையம் ஆகும் பல்வேறு அடிப்படை வசதிகளை கொண்ட புதிய பேருந்து நிலையமாகவும் அமைந்து வருகிறது.

ராசிபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அமையும் போது இரண்டாம் கட்ட பேருந்து நிலையமாகத்தான் அமையும் அதிலும் அனைத்து வசதிகளும் செய்யக்கூடிய அளவிற்கு இடம் தேவை அதற்காகத்தான் ஏழு ஏக்கர் முதல் 10 ஏக்கர் நிலம் வரை தேவைப்படுகிறது. பஸ் நிலையத்திற்கு இடம் தர முன் வருபவர்கள் தாமாக முன்வந்து தரலாம் என்றார். இந்தக் கூட்டத்தில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர்,

ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்தியா ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ். மற்றும் மருத்துவர்கள் சங்கம். வணிகர் சங்கம். நகைக்கடை உரிமையாளர்கள், துணிக்கடை உரிமையாளர்கள், ரோட்டரி சங்கம் , அரிமா சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள்

சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், வாகன உரிமையாளர்கள் சங்கம், புதிய பேருந்து நிலைய நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்கம், அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர். சங்கர், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News