ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ரதசப்தமி விழா
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ரதசப்தமி விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர் அருகே பாத்தகோட்டா கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயிலில் ரதசப்தமி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீ சீதா ராம ஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமிகளை பக்தர்கள் கிராமத்திற்குள் வீதி உலா எடுத்து சென்றனர். அப்போது சுவாமிகள் கருட உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், கிராமம் முழுவதும் வீதி உலா சென்ற சுவாமிகள் பின்னர் கோயிலை சென்றடைந்தது அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் விளக்குகள் ஏற்றப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றது.
பாத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த ரவி, முருகேஷ், வெங்கட்ராமன், முனிராஜ், லோகேஷ், முரளி, ராமமூர்த்தி ஆகியோரது குடும்பத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரத சப்தமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமிகளை தரிசனம் செய்தனர்.