பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் பள்ளிசெல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.;
Update: 2024-03-07 15:05 GMT
பள்ளி செல்லா ககுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது
நாமக்கல் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி, உதவி தணிக்கை துணை இயக்குனர் உமா தலைமையில், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட, வைப்பமலை அரசு தொடக்கப் பள்ளிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் நேற்று, மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. இதில், 15 மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கை செய்து அவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் ஆகியன வழங்கப்பட்டது.
பேரணியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ், வட்டார இல்லம் தேடிகல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.