ஆடுதுறையில் சமய நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ஆடுதுறையில் பேரூராட்சி மன்றம் சார்பில் சமய நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆடுதுறையில் பேரூராட்சி மன்றம் சார்பில் சமய நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆடுதுறை பேரூராட்சி வீரசோழன் கோ சி மணி மண்டபத்தில் நடந்த சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதில் ஆடுதுறை பேரூராட்சி துணைத்தலைவர் கமலா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஜமால் முகமது இப்ராஹிம், திமுக நசீர்முகமது , அதிமுக அசோக்குமார், மதிமுக சரவணன், பாமக குமார், அமமுக சேகர், தேமுதிக செல்வம், சிங்கப்பூர் சேது ராஜன், நரசிங்கன்பேட்டை அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக சிறுபான்மை பிரிவு தலைவர் சேக் மைதீன், அழகு பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஆடுதுறை பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயில் , ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ் ஆகியோர் பிரார்த்தனை செய்தனர். இப்தார் நோன்பின் சிறப்பு மற்றும் அதன் பெருமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துபீவி, மீனாட்சி, செல்வராணி, சுகந்தி, பரமேஸ்வரி, சாந்தி, ஷமீம்நிஷா, கண்ணன், பாலதண்டாயுதம், மாலதி, குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான் வரவேற்றார். திமுக நகர செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.