சங்கரண்டாம்பாளையத்தில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட பாசன குழாய் அகற்றம்

தாராபுரம் சங்கரண்டாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட அரசு அனுமதியின்றி பாதிக்கப்பட்ட பாசனக் குழாயை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி அகற்றப்பட்டது.

Update: 2024-02-13 12:25 GMT

இடித்து அகற்றப்பட்டது 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையத்திற்கட்பட்ட மரவப்பாளையம் குளத்துக் காட்டு தோட்டத்தில் பழனிச்சாமி கவுண்டர் மகன் நல்லசாமி வாசித்து வருகிறார்.

இவர் அப்பகுதியில் தென்னம்பிள்ளை வைத்து விவசாயம் செய்து வரும் நிலையில் இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் இருந்து பைப்லைன் பதித்து விவசாயம் செய்து வந்த நிலையில் இவர் அனுமதி இல்லாமல் பைபிளைன் போட்டு விவசாயம் செய்ய தண்ணீர் எடுத்து வருவதாக கனகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கானது ஆய்வு செய்து பின்னர் தாராபுரம் முனிசிப் நீதிமன்றத்தில் தெரிவித்து அதன் மூலம் இன்று ஐந்து அரசு துறை அதிகாரிகள் வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை கால்நடைத்துறை அந்த ஏரியா பஞ்சாயத்து உட்பட ஐந்து துறை அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுபடி பைப் லைனை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில் தாராபுரம் கோட்டாட்சியர் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தசாமி தலைமையில் மறவா பாளையம் பகுதியில் இருந்து கருங்கல்பாளையம் அமராவதி ஆற்று வரை உள்ள பைபிளை தோண்டி எடுத்தனர்  சுமார் அனுமதி இல்லாமல் ஐந்து கிலோ மீட்டர் போடப்பட்ட பைப் லைனை தோண்டி எடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.

Tags:    

Similar News