வேடசந்தூர் அருகே நீண்ட கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேடசந்தூர் அருகே நீண்ட கால ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 12:08 GMT
ஆகிராமிப்புகள் அகற்றும் பணியில் அதிகாரிகள்
வேடசந்துார் அருகே கல்வார்பட்டி ரெட்டியார்சத்திரம் ரோடு அகலப்படுத்தும் பணியை தொடர்ந்துபுளிய மரத்து கோட்டையில் நீண்ட கால ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
கல்வார்பட்டி ரெட்டியார்சத்திரம் ரோடு ஐந்தரை மீட்டர் அகலத்தில் இருந்த நிலையில் இரு வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் புளிய மரத்து கோட்டையில் இரு புறமும் கடைகள், வீடுகளை அமைத்து போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தினர்.ரோடு பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கிய நிலையில் நேற்று 15 கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.