ஆரி கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

ஆரி கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என‌ ஆரி கலை பயிற்சியாளர் ராஜலட்சுமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-12-21 11:48 GMT

கோரிக்கை

ஆரிக்கலை துணியில் ஓவியம் வரைதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இது குறித்து பயிற்சியாளர் ராஜலட்சுமி கூறும் போது தான் சிறுவயது முதல் ஆரிக்கலையில் துணியில் ஓவியம் வரைதலில் ஆர்வமாக இருந்ததாகவும் தற்போது திருச்சியில் ஆரிக்கலையில் ஓவியம் வரைதல் பயிற்சி அளித்து தற்போது நாகர்கோயில் விருதுநகர் மதுரை தூத்துக்குடி அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த 12 வருடங்களாக சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இம்மாதம் டிசம்பர் 3 ம் தேதி 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டு கின்னஸ் சாதனை செய்த பிறகு கலை பண்பாட்டு துறையில் ஆரி கலையையும் அங்கீகரித்து தன்னை தென்தமிழக மாற்றுத்திறனாளி ஆரிக்கலை பொது செயலாளராக நியமித்துள்ளதாக கூறினார். மேலும் இந்த ஆரி கலையை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தையல் பயிற்சியை பாடத்திட்டத்தில் சேர்த்தது போல ஆரி கலையையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் தற்போது கிராமப்புற பெண்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளித்து வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறினார் பேட்டியின் போது ஷீலா அபிராமி அம்சவர்த்தனி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News