வேகத்தடை அமைக்க கோரிக்கை!

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Update: 2024-03-08 04:39 GMT

வேகத்தடை

பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் கனரா மற்றும் சிட்டி யூனியன் வங்கிகள் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் முக்கிய சாலையாக இருப்பதால் வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தை தவிர்க்க இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பாஜ முன்னாள் ராணுவ பிரிவு தெற்கு ஒன்றிய தலைவர் ராஜகுமார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
Tags:    

Similar News