கோதப்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்த மான் மீட்பு

அவிநாசி அருகே கோதப்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்த இரண்டு வயது ஆண் மானை வனத்துறையினர் மீட்டு வனப் பகுதிக்குள் விட்டனர்.;

Update: 2024-06-20 01:29 GMT
கோதப்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்த  மான் மீட்பு
மான் மீட்பு
  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கோதபாளையம்  காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றனர். அங்கிருக்கும் மான்கள் இறைத்தேடி  அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடும். அதுபோல கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக காவிலிப்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் மான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது.  இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மானை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கூட்டத்தைக் கண்டதும் மான் துள்ளிக்குதித்து தப்பி ஓடியது. இந்நிலையில் நேற்று வனத்துறை மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 2 வயது ஆண்  மானை பிடித்து கோதப்பாளையம் காட்டுப்பகுதியில் விட்டனர்.
Tags:    

Similar News