இருசக்கர வாகன விபத்தில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் பலி
அருமனை மேல தெருவில் சாலையை கடக் முயன்ற ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் இருசக்கர வாகனம் மோதி பலி.
Update: 2024-03-26 17:41 GMT
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மாரப்பாடி பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ்.ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். சம்பவத்தன்று சேம்ராஜ் அருமனை மேலதெரு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் சேம்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த சேம்ராஜை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சேம்ராஜ் இறந்தார். இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.