கச்சிராயபாளையத்தில் ஆற்றுத் திருவிழா உற்சவம்

கச்சிராயபாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோமுகி ஆற்றில் ஆற்றுத்திருவிழா விமரிசையாக நடந்தது.

Update: 2024-01-20 03:14 GMT

கச்சிராயபாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோமுகி ஆற்றில் ஆற்றுத்திருவிழா விமரிசையாக நடந்தது. 

கச்சிராயபாளையத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் கோமுகி ஆற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த திருவிழாவில் கச்சிராயபாளையம் மற்றும் வடக்கனந்தல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், அகிலாண்டேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர், கச்சிராயபாளையம் பாலமுருகன் சுவாமிகள் ஊர்வலமாக கோமுகி ஆற்றிற்கு கொண்டு வரப்பட்டது. பின், ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஆற்றங்கரையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆற்றுத் திருவிழாவிற்கு வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News