அரசு நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்

Update: 2023-12-20 07:03 GMT
சாலை மறியல் 
கெங்கவல்லி சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே, தகரபுதுார் ஊராட்சிக்கு உட்பட்டது மூலப்புதுார் கிராமம். இங்குள்ள பஸ் ஸ்டாப் பகுதி நிழற்கூடத்தின் பின்புறம் வாகனங்களை நிறுத்திவிட்டு, அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில், தனி நபர் கட்டடம் கட்டி வருவுதாகவும், அப்பணிகளை தடுத்து நிறுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என, கடந்த மாதம் சேலம் கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., கெங்கவல்லி தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.நேற்று, கட்டடம் கட்டுமான பணிகளை தொடர்ந்து வந்ததால், அப்பகுதி மக்கள் சாலையின் குறுக்கே கற்களை போட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி தாசில்தார் (பொ) அன்புச்செழியன், தம்மம்பட்டி போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார், 'வரும், 22ல், சாலையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, உறுதியளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News