மதுபான கடையில் கொள்ளை – காவல்துறையினர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மதுபானக்கடை பூட்டை உடைத்து 3லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் மதுபானங்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Update: 2023-12-25 02:39 GMT

மதுபான கடையில் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தஞ்சை செல்லும் சாலையில் கடை எண் 6603 என்ற அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அரசு மதுபானக் கடை வியாபாரம் முடித்து விட்டு அதில் வேலை செய்யும் பணியாளர்கள் அரசு மதுபானக் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

வழக்கம் போல இன்று அரசு மதுபானக் கடையில் வேலை செய்யும் பணியாளர் திருஞானம் இன்று மதியம் 12 மணியளவில் கடையை திறப்பதற்காக சென்றுள்ளார் அப்பொழுது அரசு மதுபானக் கடையின் முன்பகுதி சட்டரில் உள்ள பூட்டு மற்றும் சீசிடிவி கேமரா உடைக்கப்பட்டு அரசு மதுபானக் கடையின் உள்ள 3 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெறியவந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த திருஞானம் அந்த அரசு மதுபான கடையின் சூப்பர்வைசர் மற்றும் மதுபான கடை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கந்தர்வக்கோட்டை போலீசார் மதுபான கடையை ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபான கடையில் உள்ள மதுபானங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கந்தர்வகோட்டையில் வீடு மற்றும் கோயில்களில் தொடர் திருட்டு நடைபெற்றதை தொடர்ந்து அரசு மதுபான கடையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News