வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து - ஒருவர் படுகாயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயில் தெருவில் சேர்ந்த மாரியப்பன் (42), என்பவர் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவில் வீட்டின் கதவை அடைத்து விட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரவு 2 மணி அளவில் மழை பெய்துள்ளது. அப்பொழுது வீட்டில் உள்ளே மேல் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியதால், கணவர் மாரியப்பன் மட்டும் வீட்டில் தூங்கி உள்ளார். மனைவி மாடத்தி மற்றும் குழந்தைகள் வெளியில் உள்ள திண்ணையில் படுத்துள்ளனர். இந்நிலையில் திடீரென வீட்டின் மேற்பகுதி கான்கிரீட் முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் மீது மேல்கூரை விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளார். அவரது மூன்று பிள்ளைகளும், மனைவியும் வீட்டில் வெளியே திண்ணையில் படுத்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஷேக் அப்துல்லா தலைமையிலான தீயணைப்புப் படை வீரர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்த மாரியப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.