மயிலாடுதுறையில் ரூ.2.86 லட்சம் பறிமுதல்

மயிலாடுதுறையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.86 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-17 08:38 GMT

வாகன சோதனை 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நேரத்தில் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பகுதியில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற் கொண்டனர். 

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் கூட்டுறவு சார்பதிவாளர் நடராஜன் தலைமையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற காரில் சண்முகசுந்தரம் என்பவரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆக்கூர் முக்குட்டு பகுதியில் காரில் செல்வகணபதி என்பவரால் உரிய ஆவணங்கள் இன்றி  எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News