ஊரக வளர்ச்சித்திட்ட பணிகள் - கலெக்டர் ஆலோசனை

Update: 2023-12-14 05:19 GMT
கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து,  துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தில் நடைபெற்றது.  கலெக்டர் பி.என்.ஸ்ரீதர்  தலைமை வகித்தார்.     

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களிடம் கூறுகையில்:- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து  ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் சாலை பணிகள், குடிநீர் வசதிகள், சுகாதார பணிகள், குற்றியாறு தச்சமலை பகுதியில் நடைபெற்றுவரும் பாலப்பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், நபார்டு திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளரச்சித்திட்டபணிகள், தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும்  அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. என கூறினார்.   இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர்,  உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Tags:    

Similar News