சேலம் : தாதகாப்பட்டியில் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Update: 2023-11-29 06:04 GMT
உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (40). இவர் சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரில் உள்ள பேப்பர் கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அந்த பகுதியில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.