சேலம் : பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
Update: 2023-12-10 04:44 GMT
சேலம் மாநகர காவல்துறை சார்பில் பெண்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெண்கள் மட்டும் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் மகளிர் காவல் பிரிவினர், தன்னார்வு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகளிர் மற்றும் பொதுமக்கள் (மகளிர்), ஆகியோர் கலந்து கொண்டானர். சேலம் கோரிமேடு அரசு பெண்கள் கலை கல்லூரி முன்பு துவங்கிய பேரணி அஸ்தம்பட்டி ரவுண்டானா, 5 ரோடு, 4 ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரபாத்சிக்னல், கே.எஸ் தியேட்டர் வழியாக சேலம் மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பிருந்தா, மதிவாணன், சேலம் மாநகர கூடுதல் துணை ஆணயாளர் (ஆயுதப்படை)ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.