ராசிபுரம் ஶ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
Update: 2023-12-01 04:22 GMT
சங்கடஹர சதுர்த்தி
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பட்டணம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது. சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் விநாயக பெருமானுக்கு தேன்,பஞ்சாமிர்தம்,பால்,தயிர், திருமஞ்சனம்,மஞ்சள், சந்தனம், இளநீர்,அரிசி மாவு,பன்னீர்,ஸ்வர்ண அபிசேகம் திருநீறு மற்றும் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் சாற்றபட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.